search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மலையாள சினிமாத்துறையை புரட்டிப்போட்ட MeToo: இதுவரை 17 வழக்குகள் பதிவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மலையாள சினிமாத்துறையை புரட்டிப்போட்ட "MeToo": இதுவரை 17 வழக்குகள் பதிவு

    • நீதிபதி ஹேமா அறிக்கை பாலியல் துன்புறுத்தலை வெளிப்படுத்தியது.
    • அதனைத் தொடர்ந்து நடிகைகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

    மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

    இப்படி பல நடிகைகள், சினமாத்துறையைச் சேர்ந்தவர்கள் புகார் கூற ஆரம்பித்ததால் மலையாள சினிமா துறை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பொது வெளியில் புகார் கூறியபோதிலும், காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை.

    இதனால் MeToo-வை எதிர்கொள்ள கேரள மாநில அரசால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது சோனியா மலிஹார் என்ற நடிகை 2013-ம் ஆண்டு சினிமா செட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எனது புகார் தொடர்பாக மீடியாக்கள் நடிகர் ஜெயசூர்யாவை தொடர்பு படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    பாலியல் துன்புறுத்தல் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது. இந்த 17 புகார் தொடர்பாக பலர் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாத்துறையை சேர்ந்தவர்களிம் போலீசார் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

    முன்னதாக நடிகை மினு முனீர் நடிகர்கள் எம். முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ, எடவேலா பாபு ஆகியோர் மீது துன்புறுத்தல் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் வந்த மிரட்டல் மெசேஜ்-யை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார்.

    நடிகை மினு முனீர் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா மற்றும் மணியன்பிள்ளை ராஜூ, பாபு ஆகியோர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    நான் படப்பிடிப்பு தளத்தில் கழிவறைக்கு சென்றிருந்தேன். அங்கிருந்து வெளியேறியபோது, எனக்கு பின்னால் இருந்து ஜெயசூர்யா என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்ததால் நான் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து சென்று விட்டேன்.

    நடிகர் சங்க முன்னாள் செயலாளர் செயலாளர் பாபு, அம்மா உறுப்பினர் அட்டை பெறுவதற்கு உதவி செய்வதாகக் கூறி அவர் வசிக்கும் வீட்டிற்கு அழைத்தார். அப்போது உடல் தொடர்பான துன்புறுத்தலுக்கு ஆளானேன்.

    நடிகரும், சிபிஎம் (CPM) எம்.எல்.ஏ.-வுமான நடிகர் முகேஷ், அவருடைய ஆசைக்கு இணைங்க மறுத்ததால் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை வழங்க மறுத்துவிட்டார்" எனக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×