என் மலர்
இந்தியா

குஜராத் தொங்கு பாலம் விபத்துக்கு ஊழலே காரணம்: அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
- உடனடியாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
- குஜராத்தில் பா.ஜனதா திணறி வருகிறது.
புதுடெல்லி
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்த விழுந்த சம்பவம், பெரும் ஊழலின் விளைவாக நடந்துள்ளது. அதில் பலியானோரின் ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். பாலம் கட்டுவதில் அனுபவம் இல்லாத கெடிகாரம் தயாரிக்கும் கம்பெனிக்கு பாலம் கட்ட அனுமதி அளித்தது ஏன்? இதற்கு பொறுப்பேற்று குஜராத் அரசு பதவி விலக வேண்டும். உடனடியாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆம் ஆத்மி சவாலாக உருவெடுத்து இருப்பதால், குஜராத்தில் பா.ஜனதா திணறி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story