என் மலர்
இந்தியா
என் அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் 'காந்தி'களே காரணம்- மணிசங்கர் அய்யர்
- ராகுல்காந்தியிடம் ஒருமுறை மட்டும் தான் நேரில் பேசியிருக்கிறேன்.
- பிரியங்கா காந்தி எப்போதாவது என்னிடம் போனில் பேசுவார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர் தன் அரசியல் வாழ்க்கை குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
இப்புத்தகம் தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் மணிசங்கர் அய்யர் பேட்டி கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியில், "என் வாழ்க்கையில் கேலிக்கூத்தான விஷயம் என்னவெனில் என்னுடைய அரசியல் வாழ்க்கை உருவானதற்கும் பிறகு ஓரங்கட்டப்பட்டதற்கும் காந்திகளே காரணம்.
'சோனியா காந்தியை 10 வருடங்களாக சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ராகுல்காந்தியிடம் ஒருமுறை மட்டும் தான் நேரில் பேசியிருக்கிறேன். அதுவும் ஆக்கப்பூர்வமானதாக இருக்கவில்லை. பிரியங்கா காந்தியை இரண்டு நிகழ்ச்சிகளில் சந்தித்து பேசியிருப்பேன். பிரியங்கா காந்தி எப்போதாவது என்னிடம் போனில் பேசுவார். இதுதான் அவர்களுடன் இருக்கும் தொடர்பு.
என்னை காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்திருந்த காலகட்டத்தில் ராகுல் காந்திக்கு ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க நினைத்தேன். ராகுல் காந்திக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்குமாறு பிரியங்கா காந்தியிடம் தெரிவித்தான். நீங்கள் ஏன் ராகுலிடம் பேசுவதில்லை என்று அவர் என்னிடம் கேட்டார். கட்சியிலிருந்து என்னை சஸ்பெண்ட் செய்திருப்பதால் தலைவரிடம் பேச முடியாது என கூறினேன்.
அதே சமயம் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பினேன். கடிதம் அவர்களிடம் வந்து சேர்ந்ததா என்று கூட அவர்கள் தரப்பில் பதில் வரவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு 2012 ஆம் ஆண்டு மிகவும் கடினமான காலகட்டம். அப்போது சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லை. பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் மன்மோகன் சிங் குடியரசுத் தலைவராகவும், பிரணாப் முகர்ஜி பிரதமராகவும் இருந்திருந்தால் 2014ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்திருக்காது" என்று தெரிவித்தார்.