என் மலர்
இந்தியா
நிதிஷ் குமார் வந்ததும் சட்டென எழுந்து நின்ற மோடி - வைரல் வீடியோ
- கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.
- இருவரின் ஆதரவோடு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆக இருக்கிறார்.
இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி இன்றிரவு பதவியேற்க உள்ளார். கடந்த 2014, 2019 ஆம் ஆண்டுகளில் ஆட்சியமைக்க தேவையான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. எனினும், சமீபத்திய தேர்தலில் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கிறது.
உலகின் சக்திவாய்ந்த தலைவராக இருக்கும் நரேந்திர மோடி, சர்வதேச தலைவர்களுடன் நட்புறவு கொண்டுள்ளார். பிரதமராக முதல் முறை பதவியேற்றதில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி உலக தலைவர்களின் மதிப்பை பெற்ற தலைவராக விளங்கி வருகிறார்.
பல தருணங்களில் நரேந்திர மோடியை பார்த்ததும் பல தலைவர்கள் எழுந்து நிற்கும் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க இருக்கிறார்.
இந்த முறை நரேந்திர மோடி பிரதமர் ஆக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் கட்சி ஆதரவு கட்டாயம் தேவை என்ற நிலை உருவானது. அதன்படி இருவரின் ஆதரவோடு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆக இருக்கிறார்.
இதனிடையே நிதிஷ் குமார், நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில், நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் அமர்ந்து இருக்கும் வழியே நிதிஷ் குமார் வருவதும், நிதிஷ் வருவதை பார்த்ததும் நரேந்திர மோடி எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.