search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகா கும்பமேளா: கங்கையில் புனித நீராடும் பக்தர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்- பரூக் அப்துல்லா
    X

    மகா கும்பமேளா: கங்கையில் புனித நீராடும் பக்தர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்- பரூக் அப்துல்லா

    • கும்பமேளா நல்ல விசயம்தான். கடந்த 100 ஆண்டுகளாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • புனித நதியான கங்கையில் புனித நீராடும் பக்கர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

    உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.

    45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தலைவரும், பாராளுமன்ற எம்.பி.யுமான பரூக் அப்துல்லா ராஜஸ்தான் மாநிலம அஜ்மீர் சென்றுள்ளார்.

    அவரிடம் கும்பமேளா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "கும்பமேளா நல்ல விசயம்தான். இது கடந்த 100 ஆண்டுகளாக பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புனித நதியான கங்கையில் புனித நீராடும் பக்கர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    Next Story
    ×