என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரசின் கொள்கைகளால் இந்தியாவில் நக்சலிசம் வளர்ந்தது - சத்தீஸ்கரில் சீரிய மோடி!
    X

    காங்கிரசின் கொள்கைகளால் இந்தியாவில் நக்சலிசம் வளர்ந்தது - சத்தீஸ்கரில் சீரிய மோடி!

    • ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிவைத்தார்.
    • முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது

    சத்தீஸ்கர் பயணப்பட்டுள்ள பிரதமர் மோடி பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மொஹபத்தா கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.

    இந்த நிகழ்வில் ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், காங்கிரசின் கொள்கைகளால், சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களில் பல தசாப்தங்களாக நக்சலிசம் ஊக்கம் பெற்றது. வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் நக்சலிசம் செழித்தது, ஆனால் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி என்ன செய்தது? அத்தகைய மாவட்டங்களை பின்தங்கியதாக அறிவித்து அதன் பொறுப்பிலிருந்து விலகிச் சென்றது.

    மாவோயிஸ்ட் வன்முறையில் பல தாய்மார்கள் தங்கள் அன்புக்குரிய மகன்களை இழந்தனர், பல சகோதரிகள் தங்கள் சகோதரர்களை இழந்தனர்.

    முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது. முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் ஏழை பழங்குடியினரின் வசதிகளை ஒருபோதும் கவனித்துக் கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    மேலும் பேசிய அவர், பாஜக அரசின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட முயற்சிகள் காரணமாக நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அமைதியின் புதிய சகாப்தம் காணப்படுகிறது. காங்கிரஸின் கொள்கைகளால் நக்சலிசம் அதிகரித்தது. ஆனால் பாஜக அரசு மக்களுக்கு வீடுகளை கட்டுவது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

    Next Story
    ×