search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்கண்ட் முதல்வர் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
    X

    ஜார்கண்ட் முதல்வர் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

    • சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளால் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
    • முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சார்பில் அடுத்தடுத்து 8 சம்மன்கள் அனுப்ப பட்டது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கம் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு 7 முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், 8 வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு, தனது வீட்டிலேயே வைத்து தன்னை விசாரிக்கலாம் என பதிலளித்தார்.

    அதனடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளால் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக-வினர், " ஏழாவது சம்மன் வரை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த ஹேமந்த் சோரனின் ஆணவம், எட்டாவது சம்மனில் மறைந்தது" என விமர்சித்தனர். இதற்க்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியினர், "பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல்வரை துன்புறுத்துவதற்காகவே இந்த விசாரணை செய்யப்படுகிறது. இதற்கு முன்பே ஹேமந்த் சோரன் இதுபோன்ற விஷயங்களை சந்தித்துள்ளார். விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை, இன்றும் அப்படித்தான் நடக்கப் போகிறது" என கூறினர்.

    Next Story
    ×