search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் கைது செய்யாததால் நிரவ் மோடி, விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு ஓட்டம்: நீதிமன்றம்
    X

    விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் கைது செய்யாததால் நிரவ் மோடி, விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு ஓட்டம்: நீதிமன்றம்

    • விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    • விசாரணை அமைப்புகள் அவர்களை இந்தியா கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

    கோடிக்கணக்கான பண மோசடி வழக்கில் நிரவ் மோடி, விஜய் மல்லை போன்ற தொழில் அதிபர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வெளிநாடு தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் உரிய நேரத்தில் அவர்களை கைது செய்யாததுதான் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோட காரணம் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது.

    சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டு முன்பு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜாமின் வழங்கப்பட்ட வியோமேஷ் ஷா, நிபந்தனையை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரிய மனு விசாரணைக்கு வந்தது.

    அப்போது வியோமேஷ் ஷாவின் நிபந்தனை மாற்றி அமைக்கப்பட்டால் நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றோர் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    ஆனால், விசாரணை அமைப்பின் வாதத்தை நீதிபதி நிராகரித்தார். அத்துடன், "இந்த விவாதங்களை முழுமையாக நான் ஆய்வு செய்து பார்த்ததில் வெளிநாட்டிற்கு ஓடிய நபர்கள், விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் அவர்களை கைது செய்யாததுதான் காரணம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன்" எனத் தெரிவித்தார்.

    மேலும், "வியோமேஷ் ஷா சம்மன் அனுப்பியதற்கு பதில் அளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ஜாமின் பெற்றுள்ளார். வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்காக பலமுறை விண்ணப்பம் செய்துள்ளார். ஷா வழக்கை நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றோர் வழக்குடன் ஒப்பிட முடியாது" என்றார்.

    நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி பலகோடி ரூபாய் பிஎன்பி மோசடியில் முக்கிய குற்றவாளிகள் ஆவார்கள். நிரவ் மோடி தற்போது இங்கிலாந்தில் உள்ள சிறையில் உள்ளார். மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் உள்ளார். மல்லையாக இங்கிலாந்தில் உள்ளார். 900 கோடி ரூபாய் லோன் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

    Next Story
    ×