search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்கவில்லை என்றால்... சிவசேனா எடுத்த அதிரடி முடிவு
    X

    ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்கவில்லை என்றால்... சிவசேனா எடுத்த அதிரடி முடிவு

    • முதல்வர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
    • பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்பார். இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனத் தகவல்

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.

    முதல்வர் யார் என்பதில் கூட்டணிக்குள் இழுபறி நீடிக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேதான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என சிவசேனா கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் பாஜக 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றதால் பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தனர்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவரும், ஏற்கனவே துணை முதல்வராக இருந்தவருமான அஜித் பவார், தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பட்நாவிஸ் இன்று மாலை முதல்வராக பதவி ஏற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்பாரா? என்பது தெரியவில்லை.

    முதல்வராக இருந்த நிலையில், துணை முதல்வராக பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இன்று மாலை பட்நாவிஸ் பதவி ஏற்கும்போதுதான் யாரெல்லாம் மந்திரி சபையில் இடம் பிடிக்கிறார்கள் என்பது தெரியவரும்.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்கவில்லை என்றால், சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் புதிய அரசின் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.

    ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், சிவசேனா கட்சி அரசின் எந்தவொரு பொறுப்பையில் ஏற்றுக் கொள்ளாது எனத் தெரிவித்துள்ளார். அவர் துணை முதல்வராக வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்றார்.

    இதற்கிடையே பட்நாவிஸ் உடன் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்பார்கள் என பா.ஜ.க. தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×