என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![பினராயி விஜயன் பங்கேற்ற கல்லூரி விழாவில் கறுப்பு சட்டை அணிந்து வந்த மாணவர்களுக்கு தடை- எதிர்கட்சிகள் கண்டனம் பினராயி விஜயன் பங்கேற்ற கல்லூரி விழாவில் கறுப்பு சட்டை அணிந்து வந்த மாணவர்களுக்கு தடை- எதிர்கட்சிகள் கண்டனம்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/20/1838585-1.webp)
பினராயி விஜயன் பங்கேற்ற கல்லூரி விழாவில் கறுப்பு சட்டை அணிந்து வந்த மாணவர்களுக்கு தடை- எதிர்கட்சிகள் கண்டனம்
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- பினராய் விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கருப்பு சட்டை அணிந்து செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்துவதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
2-வது முறையாக பினராய் விஜயன் முதல்-மந்திரியாக உள்ளார். கேரளாவில் பினராய் விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு கொடி காட்டுவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையடுத்து முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் முதல்-மந்திரி பினராய் விஜயன் செல்லும் பாதையில் கறுப்பு சட்டை அணிந்து செல்லும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கோழிக்கோட்டில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பங்கேற்ற கல்லூரி விழாவிற்கு கறுப்பு சட்டை மற்றும் கறுப்பு கலரில் மாஸ்க் அணிந்து சென்ற மாணவர்களை பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே கேரளாவில் முதல்-மந்திரி செல்லும் பாதையில் கருப்பு சட்டை அணிந்து செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்துவதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.