என் மலர்
இந்தியா
செல்லப்பிராணிகள் கண்காட்சி: ஒய்யாரமாக நடைபோட்டு அசத்திய 500 நாய், 100 பூனைகள்
- ஐதராபாத்தில் வீட்டு செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி.
- 150-க்கும் மேற்பட்ட வீட்டு வளர்ப்பு இனங்கள் உள்ளன.
திருப்பதி:
ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் மெகா பெட் ஷோ என்ற பெயரில் வீட்டு செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி நடந்தது. இதில் நாய் மற்றும் பூனைகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
ஏராளமானோர் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளை அலங்கரித்து அழைத்து வந்திருந்தனர்.
500-க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் 100 பூனைகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றன. ஒவ்வொரு விலங்குகளும் தங்களுக்கு ஏற்ற திறமைகளை காட்டி பார்வையாளர்களை கவர்ந்தன.
மேலும் நாய், பூனைகள் வரிசையாக ஒய்யார நடை போட்டு அசத்தின. இந்த கண்காட்சியை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டு ரசித்தனர்.
150-க்கும் மேற்பட்ட வீட்டு வளர்ப்பு இனங்கள் உள்ளன. அவற்றின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.
நாய்களுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாயை எப்படி பாதுகாப்பாக வளர்ப்பது. அது உங்களை தாக்க வந்தால் எப்படி எதிர் வினையாற்றுவது என்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.