என் மலர்
இந்தியா
5 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு - இதுவரை வாக்களித்த முக்கிய தலைவர்கள்
- பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) தொடங்கியுள்ளது.
- அரசியல் தலைவர்களும், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலிவுட் சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) தொடங்கியுள்ளது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 6 மணி முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா் - ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா 1 தொகுதி இதில் அடக்கம். அரசியல் தலைவர்களும், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலிவுட் சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சுனில் செட்டி, பார்ஹான் அக்தர், பரேஷ் ராவல், தர்மேந்திரா நடிகை ஜான்வி கபூர், ஹேம மாலினி உள்ளிட்டோர் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் மும்பை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக காலம் காணும்மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங், உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் களம் காணும் ஸ்மிரிதி இரானி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி ஆகியோர் அவரவர் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனர்.