search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தானில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் மோடி, அமித் ஷா
    X

    ராஜஸ்தானில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் மோடி, அமித் ஷா

    • ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை அகற்ற பா.ஜனதா தீவிரம்.
    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரேநாளில் ராஜஸ்தானில் பிரசாரம்.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மிசோரமில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 17-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்து பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி மற்றும் 18-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் ராஜஸ்தானில் பிரசாரம் செய்ய இருக்கிறார். 15-ந்தேதி பார்மெர் மாவட்டத்தில் உள்ள பெய்டூ என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 18-ந்தேதி பாரத்புர் மற்றும் நகாயுர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 16-ந்தேதி டோங்க் மாவட்டத்தில் உள்ள தியோலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் உள்ள கும்பல்கார்ஹக், பிம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

    நவம்பர் 18-ந்தேதி அஜ்மிர் மாவட்டத்தில் நடைபெறும் மூன்று பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். அதன்பின் நடைபெறும் ரோடுஷோவிலும் கலந்து கொள்கிறார்.

    இருவரையும் தவிர்த்து ஜெய்ப்பூரில் நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்சி தொண்டர்களை சந்தித்து பேச இருக்கிறார். அத்துடன் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் இருக்கிறார்.

    Next Story
    ×