என் மலர்
இந்தியா
சொல்லி வைப்போம்.. 'அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த கடல்' - நிதின் கட்கரி சூசகம்
- வாழும் கலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்
- அரசியலில் ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள்
அரசியல் என்பது எதிலும் திருப்தியடையாத ஆத்மாக்களின் கடல் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரான நிதின் கட்கரி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவியில் உள்ளவர். நேற்று [ஞாயிற்றுக்கிழமை] நாக்பூரில் நடந்த '50 கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லைஃப்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு பேசியுள்ளார். மேடையில் அவர் பேசியதாவது,
ஒரு நபர் குடும்பம், சமூகம், அரசியல் அல்லது கார்ப்பரேட் வாழ்க்கையில் இருந்தாலும், வாழ்க்கை சவால்கள் மற்றும் சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் "வாழும் கலையை" அந்த நபர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.
அதற்கு உதாரணம் கூறிய அவர், அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்களின் கடல், அங்கு ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள்.. உறுப்பினராக வருபவர் தனக்கு எம்எல்ஏ ஆக வாய்ப்பு கிடைக்காததால் வருத்தப்படுகிறார்.
அமைச்சர் பதவி கிடைக்காததால், எம்.எல்.ஏ., வருத்தத்தில் உள்ளார். அமைச்சர் ஆனவர், அமைச்சரவையில் நல்ல துறை கிடைக்காமலும், முதல்வராக முடியாமலும் தவிக்கிறார்.
முதல்வரோ, எப்பொழுது மேலிடம் பதவியை விட்டு போக சொல்லுமோ என்று தெரியாமல் டென்ஷனில் இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடியின் பதவிக்கு ஆர்எஸ்எஸ் செல்வாக்கு அதிகம் உள்ள நிதின் கட்கரி காய் நகர்த்தி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.