என் மலர்
இந்தியா

மீன் உணவை விரும்பி சாப்பிடும் ராகுல் காந்தி
- ராகுல் காந்தி 7 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார்.
- நெய்மீன் என்றால் ராகுல் காந்திக்கு அலாதி பிரியம்.
பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுகிறார். முதலில் யோகாசனம் செய்யும் அவர் காலை 6 மணியளவில் டீ மற்றும் பிஸ்கட்டுகளை சாப்பிட்டுவிட்டு 7 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார். பாதயாத்திரை செல்லும் போது 8 மணி அளவில் சாலையோர கடையில் டீயுடன் உளுந்து வடை சாப்பிடுகிறார். சில நேரங்களில் மசால் தோசையை விரும்பி சாப்பிடுகிறார்.
காலை 10 மணிக்கு பாதயாத்திரை ஓய்வின் போது மற்றவர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள உணவையே எடுத்துக்கொள்கிறார். கேரளாவில் காலை உணவாக தோசை, உப்புமா மற்றும் இட்லி ஆகியவை ராகுல் காந்திக்கு பரிமாறப்பட்டு வருகிறது. ஆனால் மதிய உணவுடன் மீன் குழம்பை அவர் விரும்பி சாப்பிடுகிறார். அதுவும் நெய்மீன் என்றால் அவருக்கு அலாதி பிரியம். கோழிக்கோடு வரும்போதெல்லாம் ராகுல் காந்தி அங்குள்ள ஒரு ஓட்டலில் நெய்மீன் விரும்பி சாப்பிடுவார். இதை அறிந்த பாதயாத்திரை ஒருங்கிணைப்பாளர்கள் ராகுல் காந்திக்கு மதிய உணவின்போது மீன் உணவு வகைகளை பரிமாறுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
அதே சமயம் பாதயாத்திரையின் போது ஆப்பிள் உள்ளிட்ட பழச்சாறை ராகுல் காந்தி குடிக்கிறார். இரவில் பெரும்பாலும் ரொட்டி மற்றும் பனீர் ஆகியவற்றை அவர் விரும்பி சாப்பிடுகிறார். மேலும் உடன் பாதயாத்திரை வருபவர்களின் சாப்பாடு விஷயத்திலும் ராகுல்காந்தி கவனம் செலுத்தி வருகிறார்.