search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மலப்புரம் மாவட்டத்தில் இன்று ராகுல் காந்தி பாதயாத்திரை- பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடி உற்சாகம்

    • ராகுல் காந்தி, இன்று காலை 6.30 மணிக்கு மலப்புரம் புலமந்தோல் பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார்.
    • ராகுல் காந்தி பழங்குடி இன மக்களை சந்தித்து பேசினார்.

    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி பாத யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி 11-ந் தேதி முதல் கேரள மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    பாலக்காடு மாவட்டத்தில் நேற்று பாதயாத்திரை சென்ற ராகுல் காந்தி வழியில் தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளை சந்தித்து பேசினார்.

    மேலும் சாலையின் ஓரம் தன்னை பார்க்க காத்திருந்த பள்ளி மாணவர்களையும் அழைத்து பேசினார். அப்போது சில மாணவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அவர்களையும் அழைத்து பேசிய ராகுல் காந்தி, அந்த மாணவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து ஆடினார்.

    இதுபோல பழங்குடி இன மக்களையும் சந்தித்து பேசினார். பின்னர் அவர்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி, அவர்களின் குறைகளை போக்க முயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

    ராகுல் காந்தி, இன்று காலை 6.30 மணிக்கு மலப்புரம் புலமந்தோல் பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார். பகல் 11 மணிக்கு எம்.எஸ்.டி.எம். கல்லூரியில் நிறைவு செய்தார்.

    பிற்பகல் அங்கு ஓய்வு எடுத்த பாதயாத்திரை குழுவினர் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் அங்கிருந்து புறப்படுகிறார்கள். இரவு 7 மணிக்கு மலப்புரம் தச்சினகாடம் பகுதியில் உள்ள பள்ளியில் நிறைவு செய்கிறார்.

    Next Story
    ×