search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் திரளாக பங்கேற்ற பெண்கள்-இளைஞர்கள்
    X

    இன்றைய பாதயாத்திரையின்போது தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்ற ராகுல் காந்தி.

    கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் திரளாக பங்கேற்ற பெண்கள்-இளைஞர்கள்

    • ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்ட பகுதிகளில் காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
    • பாத யாத்திரை குழுவினர் இன்று இரவு எர்ணாகுளம் அருகே கொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் தங்குகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாத யாத்திரை கடந்த 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது.

    இன்று அதிகாலை ராகுல் காந்தி ஆலப்புழா மாவட்டம் சேர்தலாவில் இருந்து தொடங்கினார். முன்னதாக தான் தங்கியிருந்த கல்லூரி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தபின்பு, தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    அதன்பின்பு ராகுல் காந்தி தொண்டர்களுடன் பாதயாத்திரை மேற்கொண்டார். இன்றைய பயணத்தில் ராகுல் காந்தியுடன் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்து கொண்டனர்.

    இதுபோல ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்ட பகுதிகளில் காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.

    ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் முரளீதரன், பவன்கேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    குத்தியதோடு பகுதியில் ஓய்வெடுக்கும் பாத யாத்திரை குழுவினர் மாலையில் மீண்டும் பயணத்தை தொடங்குகிறார்கள். இன்று இரவு எர்ணாகுளம் அருகே கொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் தங்குகிறார்கள்.

    Next Story
    ×