என் மலர்
இந்தியா
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் - 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
- ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.
அதன்படி, ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
அதன்படி, ராஜஸ்தான் தேர்தலுக்கு முதல் கட்டமாக 41 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதில் 7 எம்.பி.க்கள் பெயரும் இடம்பெற்றது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 89 பேர் அடங்கிய 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
அதில் முன்னாள் முதல் மந்திரி வசுந்தர ராஜே ஜலர்பதான் தொகுதியிலும், சதீஷ் புனியா ஆம்பர் தொகுதியிலும், ராஜேந்திர ரதோட் தாராநகர் தொகுதியிலும், ஜோதி மிர்தா நகவ்ர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.