என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![பலாத்கார சம்பவங்களில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடம்: முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தாக்கு பலாத்கார சம்பவங்களில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடம்: முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தாக்கு](https://media.maalaimalar.com/h-upload/2023/07/21/1918937-2107rakje.webp)
பலாத்கார சம்பவங்களில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடம்: முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தாக்கு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடந்த 54 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 2 லட்சம் குற்றவழக்குகள்
- 33 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் நாட்டின் 140 கோடி மக்களும் வெட்கப்படுகிறார்கள். மனித இனத்திற்கே வெட்கக்கேடானவை. இதுபோன்று ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் என எங்கு நடந்தாலும் அரசியலை தாண்டி குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனால் காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. மணிப்பூர் குறித்து நீண்ட நாட்கள் மவுனம் சாதித்த பிரதமர் மோடி, தற்போது குறுகிய நேரம் பேசிய நிலையில், மற்ற மாநிலங்களை குறிப்பிட்டது அரசியல் நாடகம் எனத் தெரிவித்துள்ளது.
மோடியின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே, ராஜஸ்தானில்தான் இந்தியாவில் நடைபெற்ற பலாத்கார சம்பவங்களில் 22 சதவீதம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வசுந்தரா ராஜே கூறியதாவது:-
பெண்கள், குழந்தைகள், தலித்கள் மற்றும் தொழில்அதிபர்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குலைந்துள்ளது. ராஜஸ்தானில்தான் பெண்களுக்கு எதிரான குற்றவழக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 54 மாதங்களில் 10 லட்சத்திற்கும் மேலான வழக்குகள் பதிவாகியுள்ளன. 7500-க்கும் அதிகமானனோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிராக மட்டும் 2 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 33 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது இந்தியாவில் நடைபெற்ற மொத்த சம்பவங்களில் 22 சதவீதம் ஆகும். கற்பழிப்பு வழக்குகளில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட்டின் பகுதியில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவம் நடந்தாலும், அவர்கள் மவுனம் காக்கிறார்கள்.
மீடியாக்கள் தரவுகளின்படி ஒவ்வொரு நாளும் சராசரியாக 18 முதல் 19 பலாத்கார சம்பவங்களும், 5 முதல் 7 கொலைகளும் நடைபெற்ற வருகின்றன.
அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரக்கணக்கான பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனர். அவர்கள் அரசில் இருந்து யாரும் இதுகுறித்து பேசுவதோ, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதோ கிடையாது.
இவ்வாறு வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.