என் மலர்
இந்தியா

கோப்புப்படம்
குடியரசு தின விழா அணிவகுப்பு- ராமர் சிலை கொண்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி?
- மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.
- ராமர் சிலை கொண்ட அலங்கார ஊர்தி இடம்பெற இருப்பதாக தகவல்.
நாட்டில் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.
அந்த வகையில், 2024 குடியரசு தின அணிவகுப்பில் உத்தர பிரதேச மாநிலம் சார்பில் குழந்தை ராமர் சிலை கொண்ட அலங்கார ஊர்தி இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே அலங்கார ஊர்தியுடன் அம்மாநிலத்தில் நடைபெறும் மெட்ரோ பணிகளை எடுத்துரைக்கும் வகையில், மெட்ரோ ரெயில் பெட்டி ஒன்றும் இடம்பெற்று இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில்- ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், அரியாணா, ஜார்க்கண்ட், லடாக், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகலயா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என தெரிகிறது.