என் மலர்
சினிமா செய்திகள்
24 வருட காத்திருப்பு.. விக்ரமை சந்தித்த காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியின் நெகிழ்ச்சிப் பதிவு
- காந்தாரா நாயகன் ரிஷிப் ஷெட்டி, தனது சமூக வலைதள பக்கத்தில் அவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவர் குறித்து மனம் திறந்துள்ளார்.
- எனது ஹீரோவை நேரில் சந்தித்ததால் உலகின் மிகவும் அதிஷ்டசாலியான மனிதானாக நான் உணர்கிறேன்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இதற்கிடையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் விக்ரம் பிசியாக இயங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் குரல் கலைஞனாகத் தனது பயணத்தைத் தொடங்கிய விக்ரம், அசாதாரண நடிப்பாலும், தனித்துவமான குரலாலும் மக்களை வெகுவாகக் கவர்ந்தார். பாலா இயக்கத்தில் நடித்த சேது படம் விக்ரமிற்கு பிரேக்கிங் பாயிண்டாக அமைந்தது.
தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாக தூள், ஜெமினி என கலக்கிய விக்ரம், ரியலிஸ்டிக் ஹீரோவாக பிதாமகன், காசி உள்ளிட்ட படங்களின் ஊடாகவும் தனது நடிப்புத் திறமையை பட்டை தீட்டிக் கொண்டார்.
இந்தநிலையில் தற்போது, விக்ரமை சந்தித்துள்ள கன்னட திரையுலகின் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார், இயக்குனர், காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி, தனது சமூக வலைதள பக்கத்தில் அவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவர் குறித்து மனம் திறந்துள்ளார்.
அவரது பதிவில், நடிகனாக உருவாவதற்கான எனது பயணத்தில் விக்ரம் சார் எனக்கு எப்போதும் பெரிய இன்ஷ்பிரேஷன், 24 ஆண்டுகள் கழித்து எனது ஹீரோவை நேரில் சந்தித்தது உலகின் மிகவும் அதிஷ்டசாலியான மனிதனாக என்னை உணர வைக்கிறது. என்னைப்போன்ற நடிகர்களுக்கு உந்துசக்தியாக இருப்பதற்கு மிகவும் நன்றி, தங்கலான் படத்துக்கு எனது வாழ்த்துக்கள் . லவ் யூ என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.