என் மலர்
இந்தியா

ஆர்.எஸ்.எஸ். பெயரில் போலி கடிதம்
- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் லெட்டர்பேடில் எழுதப்பட்டது போன்ற கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
- கடிதம் முற்றிலும் போலியானது என்று ஆர்.எஸ்.எஸ். ஊடக தொடர்பு பிரிவு தலைவர் சுனில் அம்பேத்கர் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் லெட்டர்பேடில் எழுதப்பட்டது போன்ற 2 பக்க கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பஜ்ரங்தள், இந்து சேனா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எழுதப்பட்ட கடிதம் போல் அது காட்சி அளிக்கிறது.
அதில், ''முஸ்லிம் இளம்பெண்களை வலையில் வீழ்த்தி, அவர்களை இந்து மதத்துக்கு கொண்டு வாருங்கள்'' என்று இந்துக்களுக்கு அழைப்பு விடுப்பதுபோல் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அந்த கடிதம் முற்றிலும் போலியானது என்று ஆர்.எஸ்.எஸ். ஊடக தொடர்பு பிரிவு தலைவர் சுனில் அம்பேத்கர் விளக்கம் அளித்துள்ளார். அந்த கடிதம் மீது 'போலி' என்று முத்திரையிட்டு, அதை தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Next Story