என் மலர்
இந்தியா
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சச்சின் டெண்டுல்கரின் காவலர் - ஏன் தெரியுமா?
- மாநில ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஜவான் பிரகாஷ் கப்டே.
- தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிரிக்கெட் உலகில் பிரபலமானவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளுக்கு உரியவரான சச்சின் டெண்டுல்கருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர் மாநில ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஜவான் பிரகாஷ் கப்டே.
39 வயதான பிரகாஷ் கப்டே விடுமுறை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜாம்நர் நகருக்கு சென்றிருந்த பிரகாஷ் கப்டே தனக்கு வழங்கப்பட்டு இருந்த துப்பாக்கியை கொண்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று (மே 15) அதிகாலை 2 மணியளவில் இந்த தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது. தற்கொலை செய்து கொண்ட பிரகாஷ் கப்டேவுக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
உயிரிழந்த பிரகாஷ் கப்டேவின் உடலை கைப்பற்றிய ஜாம்நர் காவல் துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், இது தொடர்பாக பிரகாஷ் கப்டேவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.