search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி ஆம் ஆத்மி மாநில தலைவராக சவுரப் பரத்வாஜ் நியமனம்.. மணீஷ் சிசோடியாவுக்கு பஞ்சாபில் பொறுப்பு
    X

    டெல்லி ஆம் ஆத்மி மாநில தலைவராக சவுரப் பரத்வாஜ் நியமனம்.. மணீஷ் சிசோடியாவுக்கு பஞ்சாபில் பொறுப்பு

    • அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் நடைபெற்றது
    • டெல்லி தலைமையில் இருந்த கோபால் ராய் குஜராத் ஆம் ஆத்மி மாநில தலைவராக மாற்றலானார்.

    தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகால ஆட்சி அதிகாரத்தை பாஜகவிடம் ஆம் ஆத்மி பறிகொடுத்தது. தற்போது பஞ்சாபில் மட்டுமே ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் கட்சியை வலுப்படுத்த ஆம் ஆத்மி தீவிரம் காட்டி வருகிறது.

    அதன்படி டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் தலைமையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

    அவ்வாறாக டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவராக இருந்த கோபால் ராய்க்குப் பதிலாக சௌரப் பரத்வாஜ் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் மாநில பொறுப்பாளராக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் டெல்லி தலைமையில் இருந்த கோபால் ராய் குஜராத் ஆம் ஆத்மி மாநில தலைவராக மாற்றலானார்.

    கோவாவின் பொறுப்பாளராக பங்கஜ் குப்தாவும், சத்தீஸ்கரின் பொறுப்பாளராக சந்தீப் பதக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் ஆம் ஆத்மி மாநிலத் தலைவராக மகாராஜ் மாலிக் நியமிக்கப்பட்டார்.

    Next Story
    ×