என் மலர்
இந்தியா

நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
- டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது.
- இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிலையில் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக டெல்லி காவல் நிலையம் வழக்குப்பதிவு (FIR) செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் அபய் எஜ். ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தற்போது உத்தரவிட முடியாது. உள்-விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் தலையிட முடியாது. தற்போது உத்தரவிட்டால் முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், உள்விசாரணை முடிவடைந்ததும், அனைத்து தகவல்களும் வெளியாகும். தேவைப்பட்டால் தலைமை நீதிபதி வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த முடிவுக்கு நாம் ஏன் இப்போதே செல்ல வேண்டும்? என நீதிபகள் தெரிவித்தனர்.