என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
புதிய உச்சம் தொட்ட பங்கு சந்தை - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
- அந்நிய முதலீட்டாளர்கள் பெறுமளவில் இந்திய பங்குகளில் முதலீடு செய்கின்றனர்
- முதல் முறையாக மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் 70 ஆயிரத்தை தாண்டியது
கோவிட் பெருந்தொற்று பரவலை தடுக்க கொண்டு வரப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் பலருக்கு தொழில் முடக்கமும் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் வருவாயை அதிகரிக்க பலர் இந்திய பங்கு சந்தைகளில் பணத்தை முதலீடு செய்ய தொடங்கினர்.
2020 வரை சீரான அளவில் இருந்து வந்த முதலீட்டாளர் எண்ணிக்கை, அதற்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது. இதனால் பங்கு சந்தையில் பல முன்னணி பங்குகள் அதிக விலைக்கு வர்த்தகம் ஆக தொடங்கி தற்போது வரை முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
உலகளாவிய பொருளாதார மந்த நிலை, சீன பொருளாதார சரிவு, அமெரிக்க-ரஷிய உறவில் சீர்கேடு, ரஷிய-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் என பல காரணிகள் இருந்தாலும் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்களும், இந்திய முதலீட்டாளர்களும் தொடர்ந்து விருப்பம் காட்டி வருகிறார்கள்.
கடந்த மாதம், 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மூன்றில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், தெலுங்கானாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் வென்றது.
இப்பின்னணியில், வார முதல் நாளான இன்று இந்திய பங்கு சந்தையில், வர்த்தக துவக்கத்திலேயே மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 69,825 எனும் அளவில் வர்த்தகமானது.
சிறிது நேரத்தில் முதல் முறையாக 70,048 எனும் புதிய உச்சத்தை தொட்டது.
கடந்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கி அடுத்த காலாண்டிற்கான இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தங்கள் கணிப்பை அதிகரித்து அறிக்கை வெளியிட்டது. இத்துடன் உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதும், இந்திய பொருளாதாரத்தின் வலுவான உள்கட்டமைப்பும், இந்திய தொழில் நிறுவனங்களில் நிகர லாபம் அதிகரித்திருப்பதும் பங்கு சந்தையின் உயர்வுக்கு காரணங்களாக கூறப்படுகிறது.