search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கேரளாவில் பூக்களுக்குள் மறைத்து தங்கம் கடத்தல்
    X

    கேரளாவில் பூக்களுக்குள் மறைத்து தங்கம் கடத்தல்

    • ரூ.61 லட்சம் மதிப்பிலான 918 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது.
    • முபீனா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் வழியாக வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அடிக்கடி பலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இவர்களை சுங்கத்துறையினர் பிடித்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை.

    இந்த நிலையில் குவைத்தில் இருந்து கொச்சி நெடும்பசேரி விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் கண்காணித்தனர்.

    இதில் ஒரு பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது பையில் செயற்கை பூக்கள் மற்றும் ஸ்குரு டிரைவர்கள் இருந்துள்ளது. அதனை சோதனை செய்தபோது நூதன முறையில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    செயற்கை பூக்களின் கைப்பிடியை தங்ககம்பிகளாக்கி அதனை இரும்பு நிற பொருட்களால் பூசியும், ஸ்குரு டிரைவர்களின் கைப்பிடிக்குள் வைத்தும் ரூ.61 லட்சம் மதிப்பிலான 918 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.

    அதனை கடத்தி வந்த பெங்களூரைச் சேர்ந்த முபீனா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×