என் மலர்
இந்தியா
சில நேரங்களில் முதல்வர் பதவியில் இருந்து விலக நினைப்பேன், ஆனால்... அசோக் கெலாட்
- ரெட் டைரி விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது
- பா.ஜனதா தலைவர்களில் யாருக்காவது முதலமைச்சராகும் தகுதி உள்ளதா? என கேள்வி
ராஜஸ்தான் மாநில முதல்வராக இருப்பவர் அசோக் கெலாட். இந்த வருட இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்ததற்காக மந்திரி ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ரெட் டைரி குறித்து பேசினார்.
தற்போது ரெட் டைரி விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளனர். இந்த முறை வெற்றி பெற அசோக் கெலாட் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நிலை உள்ளது.
இந்திய உறுப்பு தான தினத்தின்போது, அசோக் கெலாட், சில உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களுடன் அசோக் கெலாட் காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது அழ்வாரை சேர்ந்த பெண்மணி ஒருவர், சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தாங்களை முதலமைச்சராக பார்க்க விரும்புவதாக கூறினார்.
அதற்கு அசோக் கெலாட் பதில் அளிக்கையில் ''சில நேரங்களில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும் என நினைப்பேன். ஆனால் முதல்வர் பதவி என்னை விட்டு விலகுவதில்லை'' என்றார்.
பின்னர் ராஜஸ்தான் பா.ஜனதா தலைவர்கள் குறித்து பேசுகையில் ''உங்களுடைய லெவல் என்ன?. முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர்களா? உங்களை ராஜஸ்தான் மக்கள் முதலமைச்சர்களாக ஏற்றுக்கொள்வார்களா? அவர்களுடைய சொந்த முகத்துடன் தேர்தலை எதிர்கொள்ள நம்பிக்கை இல்லை. மோடி முகத்துடன் தேர்தலை சந்திப்பதாக ராஜஸ்தான் பா.ஜனதா தலைவர்கள் சொல்வது ஏன்?'' என பல கேள்விகளை எழுப்பினார்.