search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தற்கொலையை தடுக்க இப்படி ஒரு ஐடியாவா? கிறுகிறுக்க வைக்கும் இந்திய மாநிலம்..!
    X

    தற்கொலையை தடுக்க இப்படி ஒரு ஐடியாவா? கிறுகிறுக்க வைக்கும் இந்திய மாநிலம்..!

    • கோட்டாவில் இந்த ஆண்டு இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    • மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு.

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தில் ஏராளமான நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் விடுதிகள், பேயிங் கெஸ்டுகளில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கோட்டா நகரில் உள்ள விடுதிகளில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. கோட்டாவில் இந்த ஆண்டு இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, 18 வயது நிரம்பிய மாணவர் ஒருவர் நகரில் உள்ள வாடகை விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த மாதத்தில் கோட்டாவில் பதிவான நான்காவது மாணவர் தற்கொலை இதுவாகும்.

    இரண்டு ஐஐடி- ஜேஇஇ மாணவர் மற்றும் ஒரு நீட்-யுஜி ஆர்வலர் உள்பட மூன்று பயிற்சி மாணவர்கள் இந்த மாத தொடக்கத்தில் தற்கொலை செய்து இறந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு, பயிற்சி மையத்தில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பதிவாகின.

    இந்நிலையில், மாணவர்களிடையே தற்கொலை சம்பவங்களை குறைக்க கோட்டாவில் உள்ள அனைத்து விடுதிகளிலும், பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதிகளிலும் ஸ்பிரிங்-லோடட் ஃபேன்கள் நிறுவப்பட்டுள்ளன.

    இதுதொடர்பான செய்தி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து, இணைய வாசிகள் ஸ்பிரிங்- லோடட் பேன் ஐடியாவை கிண்டலடித்து வருகின்றனர். தற்கொலை எண்ணத்தில் இருந்து மாணவர்களை வெளியில் கொண்டு வர மாற்ற வேண்டியது பேன்களை (மின்விசிறி) அல்ல மாணவர்களுக்குள் ஏற்படும் மனகுழப்பத்தை என்று விமர்சித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, அதிகரித்து வரும் இறப்புகள் குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேவையான உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

    Next Story
    ×