search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடிநீர் கேட்ட மாணவிகள்.. சிறுநீரை குடிக்க சொன்ன அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    குடிநீர் கேட்ட மாணவிகள்.. சிறுநீரை குடிக்க சொன்ன அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

    • 7 வகுப்பு படித்து வந்த மாணவிகள் குழுவாக சேர்ந்து குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ண திரிபாதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • இந்த விவகாரம் அம்மாவட்ட கலெக்டரிடம் சென்ற நிலையில் ராமகிருஷ்ண திரிபாதி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சத்தீஸ்கரில் அரசு இடைநிலைப் பள்ளியில் தாகத்துக்குத் குடிநீர் வசதி செய்து தரகோரிய மாணவிகளை சிறுநீரைக் குடிக்க தலைமையாசிரியர் வற்புறுத்தியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் Phoolidumar என்ற பகுதியில் செயல்பட்டு வந்த அரசு இடைநிலைப் பள்ளியில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    7 வகுப்பு படித்து வந்த மாணவிகள் குழுவாக சேர்ந்து குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ண திரிபாதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கோபமடைந்த ராமகிருஷ்ண திரிபாதி மாணவிகளை சாக்கடையைக் குடிக்க வற்புறுத்தியுள்ளார்.

    இதனால் திகைத்துப்போய் நின்ற மாணவிகளை மேலும் சிறுநீரைக் குடிக்கும்படி கூறியுள்ளார். இதனை அந்த மாணவிகள் தங்களது கிராமத் தலைவரிடம் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அம்மாவட்ட கலெக்டரிடம் சென்ற நிலையில் ராமகிருஷ்ண திரிபாதி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×