என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார் தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/06/1961908-balu.webp)
X
தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்
By
மாலை மலர்6 Oct 2023 8:32 PM IST (Updated: 6 Oct 2023 8:34 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடந்த ஆண்டு முதல் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
- உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், ஒரிசா பாலு இன்று உயிரிழந்தார்.
தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு (60) உடல் நலக்குறைவால் காலமானார். இவர், ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர்.
இவர் கடந்த ஆண்டு முதல் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர், ஒரிசா பாலு கேரளாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்று மாலை உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு நாட்டு தலைவர்கள், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
X