search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்து- 7 பெண்கள் பரிதாப பலி
    X

    ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்து- 7 பெண்கள் பரிதாப பலி

    • படுகாயமடைந்த 11 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடகா மாநிலம் பிதார் பகுதியில் உள்ள சிட்டகுப்பா தாலுகாவில் உள்ள கிராமத்தில் நேற்று இரவு ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ மற்றும் லாரியில் இருந்த 7 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    கூலித் தொழிலாளிகளான பெண்கள் வேலை முடிந்து ஆட்டோ ரிக்‌ஷாவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பெமலகெடா அரசுப் பள்ளி அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

    இறந்தவர்களில் பார்வதி (40), பிரபாவதி (36), குண்டம்மா (60), யாதம்மா (40), ஜக்கம்மா (34) ஈஸ்வரம்மா (55), ருக்மணி பாய் (60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    படுகாயமடைந்த 11 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×