என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![இந்தியாவில் புதிதாக 95 பேருக்கு கொரோனா பாதிப்பு- இமாச்சலில் ஒருவர் பலி இந்தியாவில் புதிதாக 95 பேருக்கு கொரோனா பாதிப்பு- இமாச்சலில் ஒருவர் பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/04/20/1868923-corona.webp)
X
இந்தியாவில் புதிதாக 95 பேருக்கு கொரோனா பாதிப்பு- இமாச்சலில் ஒருவர் பலி
By
Maalaimalar22 Jun 2023 12:06 PM IST
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 95 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 82 பேர் குணமடைந்துள்ளனர்.
- தற்போது 1,784 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 92 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 95 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 82 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது 1,784 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் நேற்று இமாச்சல பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரளாவில் விடுபட்ட ஒரு பலி எண்ணிக்கை கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 900 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
X