என் மலர்
இந்தியா
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமனம் - மத்திய அரசு
- இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்.
- நடிகர் மாதவனுக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து.
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. பூனேவில் உள்ள இந்த நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நடிகர் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்த எக்ஸ் பதிவில் அவர், "இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நடிகர் மாதவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்."
Heartiest congratulations to @ActorMadhavan ji on being nominated as President of @FTIIOfficial and Chairman of the governing council.I'm sure that your vast experience & strong ethics will enrich this institute, bring positive changes, & take it to a higher level. My best…
— Anurag Thakur (@ianuragthakur) September 1, 2023
"உங்களின் முந்தைய அனுபவம் மற்றும் கடுமையான தொழில்தர்மம் ஆகியவை இந்த நிறுவனத்திற்கு பயன்படும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்களது அனுபவம் நல்லபடியான மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, நிறுவனத்தை மேன்மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் உலகின் முன்னணி நிறுவனம் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளுக்கான சர்வதேச தொடர்பு மையத்தின் உறுப்பினராக இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது.