search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் 2 கிலோ எடையுள்ள புலசா மீன் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை
    X

    ஆந்திராவில் 2 கிலோ எடையுள்ள புலசா மீன் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை

    • ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்தது.
    • கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது.

    இந்த நிலையில் ஐபோலவரம் மண்டலம் பைரவ பாளையத்தில் கோதாவரி ஆற்றில் இருந்து பிரிந்து சிறிய ஆறு ஒன்று கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று வலைவீசி மீன்களை பிடித்துக் கொண்டு இருந்தார்.

    அவரது வலையில் 2 கிலோ எடையுள்ள அரிய வகை புலசா மீன் சிக்கியது. அந்த மீனை பார்வதி என்ற மீன் வியாபாரி ரூ.19 ஆயிரத்திற்கு வாலிபரிடம் இருந்து வாங்கி மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைத்திருந்தார். புலசா வகை மீனை சாப்பிட்டால் புற்றுநோய், இதய கோளாறு மற்றும் கிட்னி பிரச்சினைகள் தீரும் என கூறப்படுகிறது. இதனால் மீனை வாங்குவதற்கு ஏராளமானவர்கள் போட்டி போட்டனர். 2 கிலோ எடையுள்ள மீனுக்கு பெண் மீன் வியாபாரி ரூ.25 ஆயிரம் விலை நிர்ணயித்து இருந்தார்.

    கடைசியாக பைரவ பாளையத்தை சேர்ந்த விக்கி என்பவர் ரூ.20 ஆயிரத்திற்கு அந்த மீனை வாங்கி சென்றார்.

    Next Story
    ×