search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்திக்கு மதிய விருந்து கொடுத்த தேஜஸ்வி யாதவ்- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ராகுல் காந்திக்கு மதிய விருந்து கொடுத்த தேஜஸ்வி யாதவ்- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

    • வீடியோ முழுவதும் கேலி பேச்சுகள், அரசியல் விவாதங்கள் உள்ளன.
    • தேஜஸ்வி யாதவ் பகிர்ந்துள்ள புதிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    பாட்னா:

    ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மதிய விருந்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த வீடியோவில் தேஜஸ்வி யாதவ், ராகுல்ஜி இப்போது 2 முறை ஆட்டிறைச்சி சாப்பிட்டார் என ஜோக் அடிக்கும் காட்சிகள் உள்ளது.

    யாதவ் குடும்பத்தில் மதிய உணவு என்ன என்ற தலைப்பில் அந்த வீடியோ தொடங்குகிறது. அதில், தேஜஸ்வி யாதவ் மற்றும் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி மதிய உணவு சாப்பிடும் காட்சிகள் உள்ளன. அந்த வீடியோவை தேஜஸ்வி யாதவ் தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    வீடியோ முழுவதும் கேலி பேச்சுகள், அரசியல் விவாதங்கள் உள்ளன. பாரதிய ஜனதா கட்சி இந்திய மக்களால் தோற்கடிக்கப்படுகிறது என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே பீகாரில் நவராத்திரி விழாவின் போது மீன் சாப்பிடுவது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் தேஜஸ்வி யாதவ், இந்த வீடியோ நவராத்திரிக்கு முந்தைய நாளில் எடுக்கப்பட்டது என விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் பகிர்ந்துள்ள இந்த புதிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.


    Next Story
    ×