என் மலர்
இந்தியா
தெலுங்கானாவில் துப்பாக்கி, ஆயுதங்களை வைத்து பூஜை செய்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.
- தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
- தேர்தல் நேரத்தில் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மங்கல் ஹாட் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜாசிங் தல்வர்லு.
தற்போது தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இவர் தசரா பண்டிகையை கொண்டாடும் வகையில் தனது வீட்டில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை வைத்து பூஜை செய்தார். ராஜா சிங் பூஜை செய்யும் போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனைக் கண்ட நபர் ஒருவர் டுவிட்டர் மூலம் மங்கல் ஹாட் போலீசில் புகார் செய்தார்.
புகாருக்கு பதில் அளித்த போலீசார் 4 நாட்களில் விளக்கம் கேட்டு ராஜா சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பினர். தேர்தல் நேரத்தில் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தது. எதற்காக உங்களது வீட்டில் ஆயுதங்கள் இருந்தன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.