என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![ஜம்மு- காஷ்மீர் எல்லை அருகே பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் ஜம்மு- காஷ்மீர் எல்லை அருகே பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்](https://media.maalaimalar.com/h-upload/2022/12/03/1801157-jk1.webp)
X
ஜம்மு- காஷ்மீர் எல்லை அருகே பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
By
Suresh K Jangir3 Dec 2022 10:59 AM IST (Updated: 3 Dec 2022 11:00 AM IST)
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தீவிரவாதிகள் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் அவ்வப்போது அவர்கள் அப்பாவி பொது மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
கடந்த 3 நாட்களாக நடந்த இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 2 ஏ.கே. 74 ரக துப்பாக்கிகள், 2 சீன துப்பாக்கிகள், 7 தோட்டாக்கள், கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள், போதை பொருட்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தீவிரவாதிகள் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
X