search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் போலீஸ்காரரை நடுரோட்டில் கொடூரமாக குத்தி கொன்ற திருடன்
    X

    டெல்லியில் போலீஸ்காரரை நடுரோட்டில் கொடூரமாக குத்தி கொன்ற திருடன்

    • டெல்லியில் பட்டப்பகலில் போலீஸ்காரரை திருடன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லி போலீசில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஷாம்பு தயாள். ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு மனைவி, ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயாபுரி பகுதியில் குடிசையில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவரின் செல்போனை பறித்து சென்றது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். குற்றவாளியை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவனது பெயர் அனிஷ் என்பது தெரியவந்தது. அவனை போலீஸ்காரர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

    வழியில் திருடன் அனிஷ் சட்டையின் அடிப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரரை சரமாரியாக மீண்டும், மீண்டும் குத்தினான். கழுத்து, வயிறு, முதுகு பகுதியில் கத்தி குத்து விழுந்தது.

    பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நடந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த யாரும் போலீஸ்காரரை காப்பாற்ற எந்த முயற்சியும் செய்ய வில்லை. அவர்கள் வேடிக்கை பார்த்தனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்பு இந்த கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்தது.

    இதுபற்றி அறிந்த மற்ற போலீசார் அங்கு வந்து திருடன் அனிஷை மடக்கி பிடித்தனர். ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஷாம்பு தயாளை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். மூத்த போலீஸ் அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.

    டெல்லியில் பட்டப்பகலில் போலீஸ்காரரை திருடன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×