search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆழ்கடலின் ரகசியங்களை ஆராயும் இந்தியாவின் புதிய நீர்மூழ்கி கப்பல்
    X

    ஆழ்கடலின் ரகசியங்களை ஆராயும் இந்தியாவின் புதிய நீர்மூழ்கி கப்பல்

    • நீர்மூழ்கி கப்பல் கடல் மட்டத்தின் கீழ் 6000 மீட்டர் ஆழத்திற்கு 3 ஆய்வாளர்களை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • நீர்மூழ்கி கப்பல் ஆய்வுகள் எதுவும் கடல் வாழ்விடத்தையும், கடல் வாழ் உயிரினத்தை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    விண்வெளி துறையில் சாதனை படைத்து வரும் இந்தியா அடுத்த கட்டமாக ஆழ்கடலின் ரகசியங்களை ஆராயும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

    அந்த வகையில் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் 'மத்ஸ்யா 6000' என்ற நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி உள்ளது.

    இந்த நீர்மூழ்கி கப்பல், கடல் மட்டத்தின் கீழ் 6000 மீட்டர் ஆழத்திற்கு 3 ஆய்வாளர்களை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலின் வளங்களை ஆய்வு செய்து, நீடித்து நிலையாக பயன்படுத்துவதற்கான தொழில் நுட்பங்களை வடிவமைத்து மேம்படுத்துவதே இதன் நோக்கம் என தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் ராமதாஸ் கூறினார்.

    இந்த நீர் மூழ்கி கப்பல் 2.1 மீட்டர் விட்டம் மற்றும் 600 பார் அழுத்தத்தை தாங்கக்கூடிய 22 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட டைட்டானியம், அலாய், ஸ்பியர் மூலம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது இந்தியாவின் முதன் முதல் மனித கடல் ஆய்வு பணியாக இருக்கும். இந்த நீர்மூழ்கி கப்பல் ஆய்வுகள் எதுவும் கடல் வாழ்விடத்தையும், கடல் வாழ் உயிரினத்தை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும், கடல் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×