search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேனிலவுக்கு சென்ற போது மருமகளை நிர்வாண பூஜையில் பங்கேற்க கூறிய மாமியார் கைது
    X

    தேனிலவுக்கு சென்ற போது மருமகளை நிர்வாண பூஜையில் பங்கேற்க கூறிய மாமியார் கைது

    • பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக தெரிகிறது.
    • அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் செல்வம் பெருக 2 பெண்களை கடத்தி நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் ஓயவில்லை.

    இந்த நிலையில் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சடையமங்கலம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது. 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவுக்கு என்னை கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் அழைத்து சென்றனர்.

    தேனிலவுக்கு செல்வதாக கூறி அழைத்து சென்ற அவர்கள் அங்கு செல்லாமல் நாகூருக்கு அழைத்து கென்றனர். அங்கு ஒரு ஓட்டலில் நாங்கள் தங்கி இருந்தோம்.

    ஓட்டலில் தங்கி இருந்த அன்றிரவு என்னை கணவர் மற்றும் குடும்பத்தார் இன்னொரு அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு மந்திரவாதி ஒருவர் தலைமையில் பூஜை நடந்து கொண்டிருந்தது. அந்த பூஜையில் பெண் ஒருவர் நிர்வாணமாக அமர வைக்கப்பட்டிருந்தார்.

    அதுபோல என்னையும் நிர்வாணமாக அமரும்படி என் கணவர் குடும்பத்தினர் கூறினர். நான் அதற்கு மறுத்தேன். இதனால் அவர்கள் என்னை தாக்கினர்.

    இதையடுத்து நாங்கள் அங்கிருந்து திரும்பினோம். அப்போது கணவர், அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் என்னை கார் ஏற்றி கொல்ல முயன்றனர். இதுபற்றி நான் போலீசில் புகார் செய்தேன். அப்போது இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    அதன்பிறகு கணவரும் என்னை தொடர்ந்து மிரட்டி வந்தார். எனவே 9 மாதங்களுக்கு முன்பு கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன்.

    இப்போது நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்ததாக மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே நானும் எனக்கு நடந்த கொடுமை பற்றி இப்போது புகார் கொடுத்துள்ளேன்.

    என்னை நிர்வாண பூஜையில் பங்கேற்க கூறிய மாமியார், கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் மாமியாரை கைது செய்தனர். பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×