search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கள்ளக்காதலுக்கு இடையூறு: சிறுவனுக்கு சூடு வைத்து கைகளை உடைத்த கொடூர தாய்
    X

    கள்ளக்காதலுக்கு இடையூறு: சிறுவனுக்கு சூடு வைத்து கைகளை உடைத்த கொடூர தாய்

    • மகனை சித்ரவதை செய்யும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார்.
    • கள்ளக்காதலனுக்கும் கடற்படை வீரரின் மனைவிக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மாச்சரலாவை சேர்ந்த கடற்படை வீரர். இவர் தற்போது ஒடிசாவில் வேலை செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி தனது 5 வயது மகனுடன் மாச்சரலாவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடற்படை வீரர் விடுமுறை தினங்களில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் கடற்படை வீரரின் மனைவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு குழந்தை தடையாக இருந்துள்ளது.

    இதனால் குழந்தைக்கு அவரது தாய் கை, கால்களில் சூடு வைத்து கைகளை பின்னோக்கி வளைத்து உடைத்தார்.

    மேலும் வாளியில் தண்ணீரை நிரப்பி சிறுவனின் தலையை மூழ்கடித்து கடும் சித்ரவதை செய்து வந்தார். மகனை சித்ரவதை செய்யும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் கள்ளக்காதலனுக்கும் கடற்படை வீரரின் மனைவிக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அவர் குழந்தையை சித்ரவதை செய்யும் வீடியோக்களை அவரது கணவருக்கு அனுப்பி வைத்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்படை வீரர் ஊருக்கு வந்து மகனை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

    மேலும் மனைவியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகன் என்றும் பாராமல் சூடு வைத்து கை, கால்களை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×