என் மலர்
இந்தியா

கேரளாவை சேர்ந்த நர்சு-2 குழந்தைகளை கொன்றவருக்கு 40 ஆண்டுகள் சிறை

- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி அஞ்சு அசோக், தனது குழந்தைகளுடன் வீட்டில் உணர்வற்ற நிலையில் கிடந்தார்.
- ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது 3 பேரும் இறந்துவிட்டது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜூ சவுலவன் (வயது 52). இவரது மனைவி அஞ்சு அசோக். கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியை சேர்ந்த இவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
இதனால் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் அங்குள்ள கெட்டரிங் பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி அஞ்சு அசோக், தனது குழந்தைகளுடன் வீட்டில் உணர்வற்ற நிலையில் கிடந்தார். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது 3 பேரும் இறந்துவிட்டது தெரியவந்தது.
அவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சஜூ சவுலவன் தான் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்திருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இங்கிலாந்தின் நார்த்தாம்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சஜூ சவுலவனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.