என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடக்கம்
    X

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடக்கம்

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறும்
    • கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

    "பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், 2023 ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை தொடரும். மழைக்காலக் கூட்டத்தொடரின் போது சட்டமன்ற அலுவல் மற்றும் பிற விஷயங்கள் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பங்களிக்குமாறு அனைத்துக் கட்சிகளையும் வலியுறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    இக்கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×