என் மலர்
இந்தியா
X
பிரதமர் மோடி 4-ந்தேதி ஜார்க்கண்டில் பிரசாரம்
ByMaalaimalar30 Oct 2024 3:13 PM IST (Updated: 30 Oct 2024 3:14 PM IST)
- ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி- பாரதிய ஜனதா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
- ஜார்க்கண்டில் பிரதமர் மோடி 7 தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு வருகிற 13 மற்றும் 20-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி- பாரதிய ஜனதா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி வருகிற 4-ந்தேதி ஜார்க்கண்டில் பிரசாரம் செய்கிறார்.
அந்த மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். ஜார்க்கண்டில் உள்ள தார்வா பகுதியில் ஆதரவு திரட்டுகிறார். ஜார்க்கண்டில் பிரதமர் மோடி 7 தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.
Next Story
×
X