என் மலர்
இந்தியா
மேற்கு வங்காளத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த திரிணாமுல் காங்கிரஸ் முயற்சி- பிரதமர் மோடி குற்றச்சாட்டு
- நான் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த முயலும் போது திரிணாமுல் காங்கிரஸ் அனுமதிக்க மாட்டேன் என்று முழக்கமிடுகிறது.
- பா.ஜ.க மீதான உங்கள் அன்பை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் மிகவும் பதற்றமாக இருக்கிறார்கள்.
கொல்கத்தா:
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் மதுராபூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
இந்தியா வளர்ந்த பாரத் ஆக மாறுவதற்கான பாதையில் செல்லத் தொடங்கி உள்ளது. அதற்கு வளர்ந்த பெங்கால்' முக்கியமானது. எனவே, உங்கள் ஆசிர்வாதம் எனக்கு தேவை.
இது இந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான மேற்கு வங்காளத்தில் எனது கடைசி தேர்தல் பொதுக்கூட்டம். இந்தத் தேர்தல் பல வழிகளில் வித்தியாசமானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கடந்த 10 ஆண்டு கால வளர்ச்சிப் பயணத்தையும், 60 ஆண்டு கால(காங்கிரஸ் ஆட்சி) அவலத்தையும் நாட்டு மக்களால் பார்க்கப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் சாசனத்தை தாக்குகிறது. ஓ.பி.சி.யினரின் உரிமைகளை பறித்து, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. அதை கொல்கத்தா ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. ஜூன் 1-ந்தேதி உங்கள் வாக்கு மூலம், வளர்ந்த பெங்கால் என்ற புதிய பயணத்தை தொடங்குவோம். ஊடுருவல்காரர்கள் வங்காள இளைஞர்களுக்கான வாய்ப்புகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தேசமும் கவலையடைந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்துகிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஊடுருவியவர்களை இங்கு குடியேற்ற விரும்புகிறார்கள். மேற்கு வங்காள எல்லையில் இருந்து தடையின்றி ஊடுருவ அனுமதிப்பதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய பாதுகாப்பை சமரசம் செய்கிறது.
நான் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த முயலும் போது திரிணாமுல் காங்கிரஸ் அனுமதிக்க மாட்டேன் என்று முழக்கமிடுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் மேற்கு வங்காளத்தை வளர்ச்சிக்கு எதிரான திசையில் கொண்டு செல்கிறார்கள். பா.ஜனதா மீதான உங்கள் அன்பை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் மிகவும் பதற்றமாக இருக்கிறார்கள்.
மேற்கு வங்காளத்தில் உள்ள பாரத் சேவாஷ்ரம், ராமகிருஷ்ணா மிஷன் நிறுவனங்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.