என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![கேரளாவில் பிரசித்தி பெற்ற பம்பா நதியில் நாளை பாம்பு படகு போட்டி கேரளாவில் பிரசித்தி பெற்ற பம்பா நதியில் நாளை பாம்பு படகு போட்டி](https://media.maalaimalar.com/h-upload/2022/07/11/1727271-boatcontest.jpg)
கேரளாவில் பிரசித்தி பெற்ற பம்பா நதியில் நாளை பாம்பு படகு போட்டி
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- கொரோனா பிரச்சினையால் படகு போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
- தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ராஜ பிரமுகன் கோப்பைக்கான படகு போட்டி நடத்தப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் ஏராளமான ஆறுகள், நதிகள் உள்ளன.
இந்த நதிகளில் ஆண்டுதோறும் படகு போட்டி நடைபெறும். இதில் ராஜ பிரமுகன் கோப்பைக்கான படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த போட்டியில் சுண்டன் படகு எனப்படும் பாம்பு படகுகள் பங்கேற்கும். ஒவ்வொரு படகிலும் வீரர்கள் துடுப்புகளுடன் அமர்ந்து இருப்பார்கள். அவர்கள் வஞ்சிப்பாட்டு மற்றும் தாள கருவிகளை இசைத்தபடி போட்டியில் பங்கேற்பார்கள். இந்த போட்டியை காண வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
கொரோனா பிரச்சினையால் இந்த படகு போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ராஜ பிரமுகன் கோப்பைக்கான படகு போட்டி நடத்தப்படுகிறது.
சம்பகுளம் பம்பை நதியில் நடைபெறும் இந்த போட்டியில் 9 படகுகள் பங்கேற்கின்றன. நாளை மதியம் 2.10 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை கேரள வேளாண்துறை மந்திரி பிரசாத் தொடங்கி வைக்கிறார். கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த படகு போட்டியை போன்று நடைபெறும் இன்னொரு பிரசித்தி பெற்ற படகு போட்டி நேரு கோப்பை படகு போட்டியாகும்.
இந்த போட்டி செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நடக்க உள்ளது.