என் மலர்
இந்தியா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செல்போனில் சாமி தரிசனம், அறைகள் முன்பதிவு செய்து கொள்ள வசதி
- செயலி ஏழுமலையான் பக்தர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
- செயலி மூலம் பக்தர்கள் அனைத்து தரிசனம் முன்பதிவு தங்குமிடம் முன்பதிவு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பதி:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக TTDevas thanams எனும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மொபைல் செயலி மூலம் உலகம் முழுவதிலும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள் தங்களது மொபைல் செயலி மூலமாகவே தரிசனம், தங்குஅறைகள் ஆர்ஜித சேவை தரிசனம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து TTDevas thanams என்கிற புதிய மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது .
இதனை நேற்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுபாபா ரெட்டி அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:-
இந்த செயலி ஏழுமலையான் பக்தர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பக்தர்கள் அனைத்து தரிசனம் முன்பதிவு தங்குமிடம் முன்பதிவு செய்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் குலுக்கல் முறை தரிசனம், முன்பதிவு தற்போதைய திருமலை நிலவரம் பண்டிகை விசேஷ நாட்கள் குறித்த விவரங்கள், இ உண்டி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஒளிபரப்பு என இது ஒரு வழி காட்டிக் போல் செயல்படும். மொத்தத்தில் அனைத்து தகவல்களும் கூடிய ஒரு ஆன்மீக மொபைல் செயலி வெளிவருவது இதுதான் முதல் முறை.
இவ்வாறு அவர் கூறினார்