என் மலர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
உத்தரபிரதேசத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாற்றம்- வீடியோ வைரலானது
BySuresh K Jangir20 Sept 2022 2:01 PM IST (Updated: 20 Sept 2022 3:45 PM IST)
- 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் தான் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்டது.
- கழிவறை பகுதியில் இருந்து வீராங்கனைகள் சாப்பாட்டை எடுத்து வருவது போல் வீடியோ இருந்தது.
ஷகாரன்பூர்:
உத்தரபிரதேச மாநிலத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 16-ந் தேதி ஷகாரன்பூரில் நடந்த 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் தான் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்டது. கழிவறை பகுதியில் இருந்து வீராங்கனைகள் சாப்பாட்டை எடுத்து வருவது போல் வீடியோ இருந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஷகாரன்பூர் விளையாட்டு அதிகாரி அனிமஷ் சக்சேனாவை மாநில அரசு சஸ்பென்டு செய்துள்ளது.
Next Story
×
X