என் மலர்
இந்தியா

X
தொகுதி மறுசீரமைப்பு.. தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானாவில் அனைத்து கட்சி கூட்டம்
By
மாலை மலர்18 March 2025 10:49 AM IST

- தெலுங்கானா துணை முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
- பி.ஆர்.எஸ்., பாஜக காட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர், பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் பங்கேற்றன.
தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானாவில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
தெலுங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகள் பங்கேற்றன. பி.ஆர்.எஸ்., பாஜக கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.
வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றவுள்ளது. இதில் கலந்து கொள்ள கேரளா, கர்நாடகா, தெலுங்கானா முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X